2012-09-21 15:30:40

கென்யக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் : பொதுத் தேர்தல்களுக்கு முன்னர் நாட்டின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்


செப்.21,2012. வருகிற மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல்களுக்குத் தயாரித்துவரும் கென்ய நாடு எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் தீர்க்கப்படுமாறு அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
கென்யாவின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இணைந்து இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அரசு உறுதியுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில், அந்நாட்டின் Tana நதிப் பகுதியில் இடம்பெற்ற இன வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
அந்நாட்டில் ஆசிரியர்களும் மருத்துவர்களும் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருவது குறித்த கவலையும் கென்ய ஆயர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.