2012-09-20 16:47:32

ஒரே பாலினத் திருமணச் சட்ட மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தோல்வி


செப்.20, 2012. ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள வழிசெய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட ஒரு மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் நிராகரித்துள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இந்த மசோதா 98-42 என்கிற வாக்குக் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஒரே பாலினத் திருமணம் தொடர்பாக பல நாட்கள் நடைபெற்ற விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.
நாட்டின் பிரதமரும் எதிர்கட்சித் தலைவரும் இந்த மசோதாவுக்கு எதிராகவே வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.