2012-09-20 16:51:20

அரசு சாரா கிறிஸ்தவப் பிறரன்பு அமைப்பு நேபாளத்தில் மீண்டும் தன் பணிகளைத் துவக்கியுள்ளது


செப்.20, 2012. அமெரிக்க அமைதிச் சாரணர் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது நேபாளத்திற்குள் மீண்டும் பணிபுரியத் துவங்கியுள்ளனர் கிறிஸ்தவ சுயவிருப்பப் பணியாளர்கள்.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறிய கிறிஸ்தவப் பிறரன்பு குழு, தற்போது அந்நாட்டில் மீண்டும் தன் நல ஆதரவு, நலவாழ்வு மற்றும் உணவு பாதுகாப்புத் தொடர்புடையப் பணிகளைத் துவக்கியுள்ளது.
நாட்டிற்குள் நுழைந்து பணிகளைத் துவக்கிய ஒருவாரத்திற்குள் 4,195 நேபாள கிராமத்தவர்களுக்கு உதவியுள்ளது இந்த கிறிஸ்தவப் பிறரன்பு குழு.
நேபாள இராணுவ வீரர்கள், மற்றும் சுய விருப்பப்பணியாளர்கள் உதவியுடன் அந்நாட்டிற்கான நல ஆதரவுப்பணிகளைத் துவக்கி ஆற்றிவருகின்றது இக்கிறிஸ்தவ குழு.








All the contents on this site are copyrighted ©.