2012-09-19 16:06:38

மூளையின் நரம்பிணைப்பு ஆராய்ச்சியில் சுவிஸ் அறிவியலாளர்கள்


செப்.19,2012. சுவிட்சர்லாந்து நாட்டு அறிவியலாளர்கள் ஓர் எலியின் மூளையின் மேற்பரப்பில் உள்ள நரம்பணுக்களுக்கு இடையிலான நரம்பிணைப்புகளின் வரைபடத்தைத் தயாரித்துள்ளனர். இதனைக் கொண்டு மனித மூளையையும் ஆராய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2005ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வுத்திட்டத்தின் மூலமாக பாலூட்டியின் மூளை ஒன்றைச் செயற்கையாக உருவாக்க அறிவியலாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
20 ஆண்டுகளாக உயிருள்ள மூளைத் திசுவிலிருந்து நரம்பணுக்களை எடுத்து தொகுத்து நரம்பிணைப்புகளை உருவாக்கி அதற்கிடையே தொடர்புபடுத்தப்படும் மின் மற்றும் வேதிப்பண்புகளை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.