2012-09-14 17:06:48

மெக்சிகோவின் கல்வி அமைப்புமுறை மறுசீரமைப்பிற்கு ஆயர்கள் அழைப்பு


செப். 14, 2012. மெக்சிகோவின் கல்வி அமைப்புமுறைகள், மறுசீரமைப்பிற்கு உள்ளாக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
14 இலட்சம் அங்கத்தினர்களைக் கொண்டுள்ள மெக்சிகோ தேசியக் கல்வித் தொழிலாளர் சங்கம், சுரண்டலிலும், வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதிலும் திளைத்துள்ளதால் கல்விப்பணி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்ற கவலையை வெளியிட்டு மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர்கள், இன்றைய மெக்சிகோவில் கல்வியின் தரம் எவ்விதம் உள்ளது என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.
மெக்சிகோ ஆசிரியர்கள் கல்விப்பணிக்கான தங்கள் அழைப்பின் மகத்துவத்தையும் அதற்குரிய மாண்பையும் உணர்ந்துகொள்ளாமல் செயல்படுவது குறித்த கவலையையும் தங்கள் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர் மெக்சிகோ ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.