2012-09-14 17:10:23

திருத்தந்தை:சிரியாவுக்கு ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்


செப்.14,2012. லெபனன் நாட்டுக்குச் சென்ற விமானப்பயணத்தில் இடம்பெற்ற நிருபர் சந்திப்பில், சிரியாவுக்கு ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி இந்நிருபர் சந்திப்பைத் தொடங்கி வைத்து நிருபர்கள் சார்பாகத் திருத்தந்தையிடம் கேள்விகளைக் கேட்டார்.
கடும் சண்டை இடம்பெற்றுவரும் லெபனின் அண்டை நாடான சிரியாவுக்கு ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும், ஆயுத இறக்குமதி பெரிய பாவம் என்று சொன்னார். ஆயுத இறக்குமதி இல்லாமல் இருந்தால் சண்டை தொடர்ந்து இடம்பெறாது என்றார். ஆயுத இறக்குமதிக்குப் பதிலாக, அமைதி, பிறரன்பு, படைப்பாற்றல் ஆகிய கருத்துக்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்றார். மேலும், பல அரபு நாடுகளில் இடம்பெற்ற மற்றும் இடம்பெற்றுவரும் அரபு வசந்தம் என்ற மக்கள் எழுச்சி சுதந்திரத்துக்கான கூக்குரல் என்று பாராட்டினார். அதேநேரம், இது சமய சகிப்புத்தன்மையோடு இணைந்து சென்றால் இது நல்லது என்றும் கூறினார் திருத்தந்தை







All the contents on this site are copyrighted ©.