2012-09-14 17:13:03

கந்தமால் பகுதி வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் இழப்பீட்டுத் தொகை கேட்டு விண்ணப்பம்


செப். 14, 2012. 2008ம் ஆண்டு ஒரிசாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவ விரோத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட அரசு குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என அப்பகுதி கிறிஸ்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த விண்ணப்பம தாங்கிய அறிக்கையை, இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியிடம் சமர்ப்பித்துள்ள கிறிஸ்தவக்குழு, தேசிய மனித உரிமைகள் அவையின் தலைவர் நீதியரசர் பாலகிருஷ்ணன், சிறுபான்மையினருக்கான தேசிய அவையின் தலைவர் வாஜாஹாட் ஹபிபுல்லா ஆகியோரையும் சந்தித்து விவரங்களைத் தெரிவித்தது.
வன்முறைகள் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதியோ, இழப்பீட்டுத்தொகையோ, நிவாரணங்களோ வழங்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது இக்குழு.
2008ம் ஆண்டில் கந்தமாலில் இடம்பெற்ற வன்முறைகளில் 90 பேர் கொல்லப்பட்டனர், 55,000 கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.








All the contents on this site are copyrighted ©.