2012-09-13 16:40:00

பாகிஸ்தானில் பொய்க் குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி விடுவிக்கப்பட அந்நாட்டு ஆயர் அழைப்பு


செப்.13,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனையின்பேரில் பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தற்போது பிணையலில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் 14 வயதுச் சிறுமி Rimsha Masih, வழக்குகளிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் இஸ்லாமாபாத் ஆயர் Rufin Anthony.எக்குற்றமும் செய்யாத, எக்குற்றமும் நிரூபிக்கப்படாத 14 வயது கிறிஸ்தவச் சிறுமியை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு நீதிபதிகளை நோக்கி கிறிஸ்தவர்கள் விண்ணப்பிப்பதாகக் கூறினார் ஆயர்.
இவ்வியாழனன்று பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இடம்பெறுவதாக இருந்த வழக்கு விசாரணை, தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போடப்பட்டுள்ளதைக் குறித்து கருத்து தெரிவித்தபோது இவ்வாறு கூறினார் ஆயர் Rufin Anthony.
கிறிஸ்தவச் சிறுமி மீது பொய்யானக் குற்றச்சாட்டை முன்வைத்த இஸ்லாமிய இம்மாம் ஒருவர் தற்போது சிறையிலடைக்கப்பட்டு அவர் மீது தேவநிந்தனை குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வழக்கின் இம்மாத 16ம் தேதி விசாரணையையும் அதன் முடிவுகளையும் பொறுத்து, இச்சிறுமியின் வழக்குத்தீர்ப்பு மாற வாய்ப்புள்ளது என சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.