2012-09-12 16:39:32

ஆயுதம் தாங்கிய மோதல்களில் சிறார்க்கு எதிரான கடும் உரிமை மீறல்கள் நிறுத்தப்படுவதற்குத் தீவிர முயற்சிகள் தேவை - ஐ.நா.


செப்.12,2012. சண்டை இடம்பெறும் இடங்களில் சிறார்க்கு எதிராகச் செய்யப்படும் கடும் மனித உரிமை மீறல்கள் தடை செய்யப்படுவதற்கு உலக அளவிலான முயற்சிகள் தீவிரப்படுத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.உயர் அதிகாரி ஒருவர்.
சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 21வது கூட்டத்தில் உரையாற்றிய, ஆயுதம் தாங்கிய மோதல்களில் சிறார் பாதுகாப்புக்கான ஐ.நா.பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி Leila Zerrougui இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான அறிக்கையில், சிறாரைப் படைகளுக்குச் சேர்க்கும் பட்டியலில் 52 போரிடும் குழுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 10ம் தேதி தொடங்கியுள்ள ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 21வது கூட்டம் 28ம் தேதி வரை இடம்பெறுகின்றது.







All the contents on this site are copyrighted ©.