2012-09-11 16:21:06

சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் பணப்பரிமாற்ற நடவடிக்கைக்கு எதிரான தனது செயல்பாட்டை வலுப்படுத்துவதற்குத் திருப்பீடத்துக்கு வல்லுனர் ஒருவர் உதவி


செப்.11,2012. வத்திக்கான் மற்றும் திருப்பீடம் குறித்த MONEYVAL வல்லுனர் குழு அறிக்கையின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு உதவியாக, MONEYVAL நடவடிக்கையில் தேர்ந்த பன்னாட்டு வல்லுனர் ஒருவரைத் திருப்பீடம் நியிமித்துள்ளது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி அறிவித்தார்.
சுவிட்சர்லாந்து நாட்டு ஃபிரைபூர்க் நகரைப் பூர்வீகமாகக் கொண்ட 40 வயது வழக்கறிஞர் Rene Bruelhartஐ இப்பணிக்கென நியமித்துள்ளது திருப்பீடம்.
FIU என்ற Liechtenstein’s Financial Intelligence பிரிவுக்கு எட்டு ஆண்டுகள் இயக்குனராகவும் பணியாற்றியுள்ள Bruelhart, AML/CFT என்ற சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்யும் செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையில் வல்லுனரும் ஆவார்.
Bruelhart, AML/CFTடன் தொடர்புடைய எல்லா விவகாரங்களிலும் திருப்பீடத்தின் ஆலோசகராக இம்மாத்தில் பணியைத் தொடங்கியுள்ளார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
பணப்பரிமாற்றம் சார்ந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையை வலுப்படுத்துவதற்கு இவர் திருப்பீடத்துக்கு உதவி செய்து வருகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் பணப்பரிமாற்றம் செய்யப்படுவது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வது போன்றவை குறித்து தனது உறுப்பு நாடுகளில் ஆய்வு செய்யும் MONEYVAL என்ற மதிப்பீட்டு வல்லுனர் குழு, ஐரோப்பிய அவையின் ஓர் அங்கமாகும். 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் குழுவின் மதிப்பீட்டின்கீழ் 28 நாடுகள் உள்ளன. இந்த மதிப்பீட்டுக் குழுவில் இஸ்ரேலும் இணைவதாகக் கேட்டுக் கொண்டதன்பேரில் 2006ம் ஆண்டில் அந்நாடும் இணைக்கப்பட்டது.
இந்த MONEYVAL குழு, திருப்பீடம் மற்றும் வத்திக்கானின் பணப்பரிமாற்றம் குறித்து மதிப்பீடு செய்து அறிக்கையையும் கடந்த ஜூலையில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.