2012-09-10 17:30:28

புதுமைகளைப் புகுத்தும் உலக நிறுவனங்கள் பட்டியலில் புதிதாக ஐந்து இந்திய நிறுவனங்கள்


செப். 10, 2012. புதுமைகளைப் புகுத்தும் உலக நிறுவனங்கள் பட்டியலில் புதிதாக ஐந்து இந்திய நிறுவனங்களை இணைத்துள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டின் Forbes இதழ்.
ஒரு நிறுவனத்தின் ஆற்றல், அதன் செல்வாக்கு, தத்துவ நோக்கு, மக்களின் முன்னேற்றத்தில் அது எந்த அளவுக்கு நெம்புகோலாகச் செயல்படுகிறது என்பவைகளின் அடிப்படையில் உலக நிறுவனங்களைத் தர வரிசைப்படுத்தும் Forbes இதழின் பட்டியலில், இந்தியாவின் கட்டுமான நிறுவனம் Larsen & Toubro இப்பட்டியலில் 9வது இடத்தையும், நுகர்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள Hindustan Unilever நிறுவனம் 12வது இடத்தையும், கணனிப் பணிகள் தொடர்புடைய Infosys நிறுவனம் 19வது இடத்தையும், கணனிக்கான மென்பொருட்களைத் தயாரிக்கும் Tata Consultancy 29வது இடத்தையும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து இயங்கும் இந்திய மருந்து நிறுவனமான Sun Pharmaceutical 38வது இடத்தையும் பெற்றுள்ளன.








All the contents on this site are copyrighted ©.