2012-09-10 17:23:24

சீனாவின் தேசியக்கல்வித் திட்டத்திற்கு Hongkong கர்தினால் எதிர்ப்பு


செப். 10, 2012. ஹாங்காங் மாணவர்களை மூளைச்சலவைச் செய்ய முயலும் சீன அரசின் தேசியக் கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டத்தில் ஒரு இலட்சத்து இருபது ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஹாங்காங் கர்தினால் Joseph Zen உட்பட எண்ணற்ற முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட இப்போராட்டம், தேசியக் கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் மேற்கொள்ளும் உண்ணா நோன்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஹாங்காங்கில் இடம்பெற்றது.
சீனாவின் வரலாற்றில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மதசுதந்திரக் கட்டுப்பாடுகள் போன்றவை குறித்த உண்மைகளை மறைத்து சீனாவின் வெற்றிகளை மட்டுமே உள்ளடக்கிய வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்ற சீன அரசின் காட்டாயப் பாடத்திட்டத்திற்கு ஹாங்காங் பள்ளிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
சீன அரசின் இந்தக் கல்வித்திட்டம் இளையோரை மூளைச்சலவை செய்வதற்கான அரசின் முயற்சி என குறை கூறியுள்ள ஹாங்காங் கர்தினால் Zen, ஹாங்காக்கின் இலவசக் கல்வித்திட்டத்தை அகற்றி, தன் கட்டுப்பாடின்கீழ் கொண்டுவருவதன் மூலம் கத்தோலிக்கக் கல்வி நிலையங்களைக் கைப்பற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கவலையை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.