2012-09-08 14:17:26

ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய பத்து இலட்சம் சிறார் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிப்பு


செப்.08,2012. ஆப்கானிஸ்தானில் பன்னாட்டு அளவில் பெருமளவில் மனிதாபிமான உதவிகள் இடம்பெற்று வந்தாலும் அந்நாட்டில் 5 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய பத்து இலட்சம் சிறார் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று AP செய்தி நிறுவனம் கூறியது.
MICS என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி ஆப்கானிஸ்தானில் 29.5 விழுக்காட்டுச் சிறார் ஊட்டச்சத்துக் குறைவாலும், 30 விழுக்காட்டுச் சிறார் பசியின் கொடுமையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.
ஆப்கானிஸ்தானில் போதுமான உணவு இருக்கின்றபோதிலும், ஊட்டச்சத்துக் குறித்த அறிவின்மையும், வறுமையும், தாய்ப்பால் கொடுப்பது குறித்த தவறான எண்ணமுமே இதற்கு காரணங்கள் என்றும் அவ்வமைப்பு கூறியது.








All the contents on this site are copyrighted ©.