2012-09-07 16:09:01

மாரனைட் ரீதி முதுபெரும் தலைவர் : சிரியாவில் கிறிஸ்தவர்கள் உறுதியானதன்மையை விரும்புகின்றனர்


செப்.07,2012. சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்கள் அந்நாட்டு அரசுத்தலைவர் Bashar al-Assadவுக்கு ஆதரவளிக்கவில்லை, ஆனால் அவர்கள் நாட்டில் உறுதியானதன்மையை விரும்புகின்றனர் என்று லெபனன் மாரனைட்ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Bechara Raï கூறினார்.
சிரியா நாட்டுக் கிறிஸ்தவர்கள் அரசு சார்பில் இருந்து அரசுத்தலைவர் Assadவுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்ற மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த முதுபெரும் தலைவர் Raï, கிறிஸ்தவர்கள் அரசுத்தலைவர் Assadவுக்குச் சார்பாக இல்லை, மாறாக நாட்டுக்குச் சார்பாக இருக்கிறார்கள் என்று கூறினார்.
மத்திய கிழக்கிலுள்ள மிகப் பழமையான கிறிஸ்தவச் சமூகங்களில் சிரியாவிலுள்ள கிறிஸ்தவச் சமூகமும் ஒன்று. சிரியாவின் 2 கோடியே 20 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 5 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இவர்கள் அண்மை ஆண்டுகளாக ஓரளவு சமய சுதந்திரத்தைக் குறிப்பாக அரசுத்தலைவர் Assadல் ஊக்குவிக்கப்பட்ட வழிபாட்டுச் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.
மேலும், சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கடும் வன்முறைகளால் ஏறத்தாழ 13 இலட்சம் சிறார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யூனிசெப் நிறுவனம் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.