2012-09-05 16:10:58

யூரோ நெருக்கடியால் வேலைவாய்ப்பற்ற இளையோரின் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது - ஐ.நா


செப்.05,2012. யூரோப்பணப் புழக்கமுள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் உலகில் வேலைவாய்ப்பற்ற இளையோரின் நிலை மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐ.நா வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
“உலகில் வேலைவாய்ப்பற்றவர்கள் குறித்த ஒரு கண்ணோட்டம்” என்ற தலைப்பில் உலக தொழில் நிறுவன அலுவலகர் ஒருவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வயது வந்தோரைவிட இளையோரே மூன்று மடங்கு வேலையின்றி இருக்கும் நிலை தெரிவதாகக் கூறப்பட்டுள்ளது.
உலகில் 7 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட இளையோர் வேலை தேடுகின்றனர் எனக் கூறும் அவ்வறிக்கை, பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் 2017ம் ஆண்டில் வேலைவாய்ப்பற்ற இளையோரின் எண்ணிக்கை 12.9 விழுக்காடாக இருக்கும் என்று அஞ்சப்படுவதாக கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.