2012-09-05 16:00:55

புனித பூமியில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து கிறிஸ்தவத் தலைவர்கள் கண்டனம்


செப்.04,2012. இஸ்ரேலின் Trappist துறவு சபை இல்லம் ஒன்று வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டிருப்பதற்குத் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் புனிதபூமிக் கிறிஸ்தவத் தலைவர்கள்.
இஸ்ரேலில் கிறிஸ்தவத்துக்கு எதிராக இடம்பெறும் போதனைகள் கிறிஸ்தவர்கள் மீதான வெறுப்புணர்வை ஊக்கப்படுத்துகின்றன என்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் குறை கூறினர்.
எருசலேம் நகருக்கு வெளியே, Latrunலுள்ள Trappist துறவு சபை இல்லத்தின் முக்கிய கதவுக்கு இச்செவ்வாய் காலை நெருப்பு வைக்கப்பட்டு, அத்துறவு சபை இல்லச் சுவரில் கிறிஸ்தவத்துக்கு எதிரான சொற்றொடர்கள் எழுதப்பட்டிருந்தன.
கிறிஸ்தவத்தை அவமதிக்கும் இந்த நிகழ்வுக்கு எதிராகக் கண்டன அறிக்கை வெளியிட்ட கிறிஸ்தவத் தலைவர்கள், புனித பூமியில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, இஸ்ரேலிலுள்ள நூற்றுக்கணக்கான யூதர்கள் இந்த Latrun துறவு சபை இல்லத்தை வாரந்தோறும் பார்வையிட்டு வருகின்றனர். இவர்கள் அந்த இல்லத் துறவிகளால் அன்போடு வரவேற்கப்படுகின்றனர். இந்தத் துறவிகள் யூதர்களுடன் உரையாடலை ஊக்குவித்தும் வருகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.