2012-09-05 16:09:21

பத்து இலட்சம் காங்கோ மக்கள் கையெழுத்திட்டுள்ள அமைதி கோரும் மனு ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது


செப்.05,2012. காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் இடம்பெறும் போர் மற்றும் அந்நாட்டை வெளிநாட்டவர் ஆக்ரமிக்க முயற்சிப்பதற்கு எதிராய்ப் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட கையெழுத்துக்கள் கொண்ட மனுவை அந்நாட்டுச் சமயத் தலைவர்கள் ஐ.நா.தலைமையகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
காங்கோ கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Nicolas Djomo தலைமையில் நியுயார்க் சென்ற கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலைவர்கள் அடங்கிய குழு இம்மனுவை ஐ.நா.வில் சமர்ப்பித்துள்ளது.
காங்கோவின் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற யுக்தியில், M23 போன்ற கெரில்லா இயக்கங்கள் North Kivu மக்களைப் பல மாதங்களாக அச்சுறுத்தி வருவதை அமெரிக்க அரசியல், பொருளாதார மற்றும் மதத் தலைவர்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் இக்குழு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது என பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
காங்கோவின் கிழக்குப் பகுதியிலுள்ள பெருமளவான கனிம வளங்களை அநியாயமாய் அனுபவிக்கும் எண்ணத்தில் வெளிநாட்டுச் சக்திகளின் ஆதரவுடன் இந்தக் கெரில்லா இயக்கங்கள் செயல்படுவதாகவும் இந்தப் பல்சமயக் குழு அமெரிக்கச் சமயத் தலைவர்களிடம் புகார் சொல்லியுள்ளது







All the contents on this site are copyrighted ©.