2012-09-04 15:44:01

ஆப்ரிக்கக் கருத்தரங்கு : நற்செய்தி அறிவிப்பின் சவால்களை ஆராய்ந்து வருகிறது


செப்.04,2012. இன்றைய ஆப்ரிக்காவில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குச் சாட்சிகளாய் இருப்பது என்ற தலைப்பில் திருப்பீட பொதுநிலையினர் அவை காமரூன் நாட்டு யவுண்டேயில் கருத்தரங்கு ஒன்றை இச்செவ்வாயன்று தொடங்கியுள்ளது.
ஆப்ரிக்காவின் எல்லா நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கு கொள்ளும் இக்கருத்தரங்கு குறித்துப் பேசிய திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் Stanislaw Rylko, இந்தப் பெரிய ஆப்ரிக்கக் கண்டத்தில் நற்செய்தியை அறிவிப்பதில் பொதுநிலையினருக்கு இருக்கும் முக்கிய பணி இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்படும் என்று கூறினார்.
ஆப்ரிக்காவின் சமய, சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் துன்பங்கள் நிறைந்த சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட கர்தினால் Rylko, பொதுநிலையினர் இந்தச் சவால்களைச் சந்திப்பதற்கு கருத்துக்களும் ஆலோசனைகளும் இக்கருத்தரங்கில் வழங்கப்படும் என்று கூறினார்.
இக்கருத்தரங்கு வருகிற ஞாயிறன்று நிறைவடையும்







All the contents on this site are copyrighted ©.