2012-09-03 15:39:52

கவிதைக் கனவுகள்-வெற்றி நிச்சயம் (தன்னம்பிக்கை என்ற இணையதளத்திலிருந்து கவிஞர் ஞானசித்தன்


உன்
கண்ணாடி மனதில்
கவலைகளெனும் தூசி
படியாமல் பார்த்துக்கொள்

உன்
இரும்பு நெஞ்சத்தில்
சோம்பலெனும் துரு
பிடிக்காமல் பார்த்துக்கொள்

உன்
தெளிந்த சிந்தனை ஓட்டத்தில்
எதிர்மறை எண்ணங்களான
பாசி படராமல் பார்த்துக்கொள்

உன்
வெள்ளை மனதில்
கர்வமெனும் கறைசேராமல்
பார்த்துக்கொள்

சோம்பலைச் சாம்பலாக்கு
அலைபாயும் மனதை அடக்கு
முடங்கிக் கிடக்கும்
உன் திறமையை முடுக்கிவிடு
கட்டிக்கிடக்கும்
உன் ஆற்றலைக் கட்டவிழ்த்து விடு
வெற்றி நிச்சயம்







All the contents on this site are copyrighted ©.