2012-08-31 14:31:12

செப் 01, 2012. கவிதைக் கனவுகள்...... வாழ்வின் நிலையாமை குறித்து கவிமணி


ஏகாந்தம் யாவருக்கும் இசைய மாட்டாது;
எந்நாளும் கூடியே வாழ வேண்டும்;
சாகாத வரம்பெற்றோர் எவரும் இல்லை;
தளர்ந்தவரைத் தாங்குவதே தரும மாகும்;
ஆகாய மளவுயர்ந்து வளர்ந்து நின்ற
அரண்மனையும் அரைநொடியில் அழியுமென்று
பீகாரால் கொற்றாவால் அறியார் இந்தப்
பேருலகிற் பின்எதனால் அறிவார்? ஐயா!








All the contents on this site are copyrighted ©.