2012-08-29 16:00:57

மணிப்பூரில் Mary Kom பெயரில் புதிய சாலை


ஆக.29,2012. இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் Churachandpur மாவட்டத்திலுள்ள ஒரு சாலைக்கு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற Mary Kom பெயரை வைப்பதற்கு அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.
உலக குத்துச் சண்டை வீரராக ஐந்து முறை தேர்வாகியுள்ள Mary Kom, இவ்வாண்டு இலண்டன் ஒலிம்பிக்ஸில் குத்துச் சண்டையில் வெண்கலம் வென்றதைப் பாராட்டும் விதமாக அவருக்கு கூடுதல் காவல்துறை ஆணையர் என்ற பதவி உயர்வு அளித்துள்ளதுடன் 50 இலட்சம் ரூபாய்ப் பரிசுத் தொகையையும் மாநில அரசு வழங்கியுள்ளது.
Churachandpur நகரையும் அந்நகரின் உதவி காவல்துறை அதிகாரியின் அலுவலகத்தையும் இணைக்கும் சாலைக்கு Mary Kom சுற்றுச்சாலை எனப் பெயரிடவிருப்பதாக மணிப்பூர் நலவாழ்வு அமைச்சர் T Phungzathang அறிவித்தார்.
மேலும், Churachandpurல் பொது வளாகம் ஒன்று அமைப்பதற்கு பத்து இலட்சம் ரூபாய்க்கும் அரசு அனுமதியளித்துள்ளது. Mary Kom, Churachandpur மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.