2012-08-28 14:36:21

திருத்தந்தை, இத்தாலியப் பிரதமர் சந்திப்பு


ஆக.28,2012. பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இத்தாலியப் பிரதமர் Mario Montiயை இத்திங்கள் மாலை சந்தித்துப் பேசினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
ஏறத்தாழ 45 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐரோப்பிய சமுதாய அவை எதிர்நோக்கும் சவால்கள், குறிப்பாக, ஐரோப்பாவின் தற்போதைய நிலைமை குறித்தும், ஐரோப்பியர்கள், குறிப்பாக இளைய தலைமுறைகள், அக்கண்டத்தின் மனித மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்விதத்தில் உதவ முடியும் என்பது குறித்தும் பேசப்பட்டதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
தற்போது கடன் நெருக்கடியிலுள்ள இத்தாலியை ஆட்சி செய்வதற்காகக் கடந்த நவம்பரில் அரசுத்தலைவர் Giorgio Napolitano அமைத்த புதிய அரசின் பிரதமரான Monti, கடந்த நவம்பரிலிருந்து பல தடவைகள் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய ஐரோப்பிய நெருக்கடிகள் குறித்து பெர்லினில் ஜெர்மன் Chancellor Angela Merkelஐ இப்புதனன்று சந்திக்கும் Monti, வருகிற செப்டம்பர் 4ம் தேதி உரோமையில் ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் Francois Hollandeயையும் சந்திக்கவுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.