2012-08-28 15:08:12

சிறிய ஆயுதங்கள் சட்டத்துக்குப் புறம்பே வியாபாரம் செய்யப்படுவதைத் தடை செய்ய ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தல்


ஆக.28,2012. ஒவ்வோர் ஆண்டும் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிர்களைக் காவு கொள்ளும் சிறிய ஆயுதங்களும், சுமந்து செல்லக்கூடிய வெடி கலங்களும் சட்டத்துக்குப் புறம்பே வியாபாரம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உறுதியுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
சண்டை நடக்கும் இடங்கள், சண்டை நடந்து முடிந்த இடங்கள், போதைப்பொருள் வியாபாரிகள், ஆட்கடத்தல் தொழில் செய்வோர், குற்றக் கும்பல்கள் ஆகியவர்களிடம் சிறிய ஆயுதங்கள் சட்டத்துக்குப் புறம்பேத் தாராளமாகப் புழக்கத்தில் உள்ளது தடை செய்யப்பட வேண்டும் என்று மூன் கூறினார்.
சிறிய ஆயுதங்களும், சுமந்து செல்லக்கூடிய வெடி கலங்களும் குறித்த ஐ.நா.ஆய்வுக் கூட்டத்தில் இவ்வாறு பேசினார் மூன்.
பன்னாட்டு அளவில் சட்டத்துக்கு உட்பட்டு வியாபாரம் செய்யப்படும் இவ்வாயுதங்களின் மதிப்பு 850 கோடி டாலர் எனவும், இது 2006ம் ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகம் எனவும் ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.







All the contents on this site are copyrighted ©.