சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் விவிலியம் ஓர் இலத்தீன் அமெரிக்க நாட்டில் வெளியிடப்படவிருக்கின்றது
ஆக.25,2012. மறுசுழற்சி செய்யப்பட்ட தாள்களில் காய்கறிகளில் தயாரிக்கப்பட்ட மையால் பதிவுசெய்யப்பட்ட
வார்த்தைகளைக் கொண்ட விவிலியம் ஒன்று தென் அமெரிக்க நாடான ஈக்குவதோரில் வெளியிடப்படவிருக்கின்றது.
சுற்றுச்சூழலுடன் நல்லுறவு கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஒன்றிணைந்த விவிலியக்
கழகங்கள் இந்தத் திட்டத்தைச் செய்து வருகின்றன. இயற்கைத்தாய் மதிக்கப்படும் ஈக்குவதோரின்
Galapagos தீவுகளில் இந்த விவிலியத்தை இம்மாதம் 28ம் தேதி வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளன
இக்கழகங்கள். Galapagos தீவுகள் 1979ம் ஆண்டிலிருந்து பாரம்பரிய இயற்கைவளச் சின்னமாக
மாறியுள்ளன. படைப்பின்மீது கடவுள் அக்கறை கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் பகுதிகள்
இந்த விவிலியத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.