2012-08-25 15:28:19

கொழும்பு : அணுத்தொழில்நுட்பம் தொடர்பான அனைத்துலக மாநாடு


ஆக.25,2012. அணுத் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்துலக மாநாடு இலங்கையின் கொழும்பில், தலதாரி பயணியர் மாளிகையில் இம்மாதம் 27ம் தேதி தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதைக் கருப்பொருளாகக் கொண்டு இம்மாநாடு நடைபெறவுள்ளது.
சீனா, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், நியூசிலாந்து, வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த அனைத்துலக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
ஐ.நா. உறுப்பு நாடுகளில் நில வளங்களைச் சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து இம்மாநாட்டில் விவரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.