2012-08-25 15:09:59

Rimsha Masihயின் விடுதலையை வலியுறுத்தி ஆக.25ல் லாகூரில் பேரணி


ஆக.25,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள 11 வயதுச் சிறுமி Rimsha Masih விடுதலை செய்யப்படுவதை வலியுறுத்தி இச்சனிக்கிழமையன்று லாகூரில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
பாகிஸ்தானின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து இந்தச் சிறுமியோடு ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதற்கு இதுவே தக்க தருணம் என்று இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி ஆயர் ரூஃபின் அந்தோணி கூறினார்.
மேலும், அனைத்துப் பாகிஸ்தான் சிறுபான்மையினர் கூட்டமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் Tahir Naveed Chaudhry என்ற வழக்கறிஞரை Rimshaவுக்காக வாதிடுவதற்காக நியமித்துள்ளது.
World Vision in Progress என்ற கிறிஸ்தவ அரசு சாரா அமைப்பு இச்சிறுமியின் பிணையலுக்காக மனுக் கொடுத்துள்ளது. இது வருகிற செவ்வாயன்று விவாதிக்கப்படும் எனவும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. இதற்கிடையே, Rimsha மீது சாட்டப்பட்டுள்ள இக்குற்றம் நிரூபணமானால், பாகிஸ்தான் சட்டத்தின்படி அவள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டில் முஸ்லீம்கள் மத்தியில் பரவலான எண்ணம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Down's syndrome என்ற மனநிலைக் குறைவுள்ள 11 வயதுச் சிறுமி Rimsha, அரேபிய மொழியையும், குரானையும் சொல்லித்தர உதவும் ஒரு நூலின் சில பக்கங்களை எரித்தார் என்று குற்றச்சாட்டப்பட்டு இம்மாதம் 18ம் தேதி சிறையில் வைக்கப்பட்டார்.
Rimsha மீது சாட்டப்பட்டுள்ள இக்குற்றம் நிரூபணமானால், அச்சிறுமிக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.