2012-08-24 17:25:34

கூடுதலான அகதிகளை ஏற்றுக்கொள்ள ஆஸ்திரேலியா தீர்மானம்


ஆக.24,2012. ஆஸ்திரேலியாவில் குடியேற்றதாரர் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தத்தின் பயனாக, அந்நாடு ஒவ்வோர் ஆண்டும் 45 விழுக்காட்டு அகதிகளைக் கூடுதலாக ஏற்றுக்கொள்ளும் என அந்நாட்டுப் பிரதமர் Julia Gillard அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதையொட்டி இதற்குத் தீர்வு காணும் நோக்கத்தில் அரசு நியமித்த ஒரு தனிப்பட்ட ஆய்வுக்குழுவின் பரிந்துரையின்படி இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளும் அகதிகளின் எண்ணிக்கையை 13,750லிருந்து 20,000 ஆக அதிகரிக்குமாறும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவ்வெண்ணிக்கையை 27,000 ஆக உயர்த்துமாறும் அக்குழு பரிந்துரை செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடிப் படகுகளில் வரும் மக்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களாகவே அதிகரித்து வருகின்றது. இப்பயணங்களின்போது கடந்த ஆண்டில் மட்டும் 600 பேர் கடலில் மூழ்கியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.