2012-08-22 15:56:03

சைப்ரஸ் நாட்டில் கிறிஸ்தவக் கோவில்கள் சூறையாடப்பட்டுள்ளன - கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்


ஆக.22,2012. சைப்ரஸ் நாட்டில் 120க்கும் மேற்பட்ட கிறிஸ்தவக் கோவில்கள் சூறையாடப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இரண்டாம் Chrysostomos வெளியிட்டார்.
இத்தாலியின் ரிமினியில் நடைபெற்றுவரும் ஒரு மாநாட்டில் இத்திங்களன்று உரையாற்றிய முதுபெரும் தலைவர் இரண்டாம் Chrysostomos, சைப்ரஸ் நாட்டில் துருக்கி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பல கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
சூறையாடப்பட்டுள்ள கோவில்களை ஒரு அருங்காட்சியகமாக, அல்லது ஒரு கிடங்காக துருக்கி படைகள் மாற்றியுள்ளன என்றும், ஒரு சில இடங்களில் கிறிஸ்தவக் கோவில்கள் இஸ்லாமிய மசூதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன என்றும் முதுபெரும் தலைவர் எடுத்துரைத்தார்.
மதச்சுதந்திரம் குறித்து ரிமினியில் நடைபெறும் மாநாடு இச்சனிக்கிழமை முடிவுறும்.








All the contents on this site are copyrighted ©.