2012-08-21 16:06:54

திருத்தந்தையின் லெபனன் நாட்டுக்கானத் திருப்பயணத்தைத் தள்ளிப்போடும் திட்டமில்லை : அருள்தந்தை லொம்பார்தி


ஆக.21,2012. சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டையினால் லெபனன் பகுதியில் பதட்டநிலைகள் உருவாகியிருந்தாலும் விடுத்து, லெபனன் நாட்டுக்கானத் திருத்தந்தையின் திருப்பயணம் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் எனத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
சிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகள், லெபனன் நாட்டுக்குள்ளும் பரவக்கூடும் என்ற அச்சநிலை உருவாகியுள்ளதால் இது திருத்தந்தையின் லெபனன் நாட்டுக்கானத் திருப்பயணத்திற்கு ஆபத்தாக அமையக்கூடும் என்று கடந்த வாரத்தில் செய்திகள் வெளியானதை முன்னிட்டு இவ்வாறு நிருபர்களிடம் கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.
இத்திருப்பயணத்தின்போது பயன்படுத்தப்படும் திருத்தந்தையின் வாகனம் ஏற்கனவே கப்பல் மூலம் லெபனனுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் அறிவித்தார் திருப்பீடப் பேச்சாளர்.
வருகிற செப்டம்பர் 14 முதல் 16 முடிய திருத்தந்தையின் லெபனன் நாட்டுக்கானத் திருப்பயணம் இடம்பெறும்.







All the contents on this site are copyrighted ©.