2012-08-20 15:06:22

கிறிஸ்தவ, இஸ்லாமிய உறவுகள் வளர இன்றைய தலைமுறையினர் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் - அமெரிக்க ஆயர்


ஆக.20,2012. வருங்காலத்தில் அமெரிக்காவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே உறுதியான உறவுகள் வளர இன்றைய தலைமுறையினர் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்று அமெரிக்க ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்லாமியர் கடைபிடித்துவந்த இரமதான் மாதம் நிறைவுற்றதைத் தொடர்ந்து, அம்மதத்தைச் சார்ந்தவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய அமெரிக்க ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் தலைவரான ஆயர் Denis Madden இவ்வாறு கூறினார்.
இரமதான் மாதம் கடைபிடிக்கப்படும் நோன்புகள், ஆன்மீகப் புத்துணர்ச்சியை வளர்க்கும் அதேநேரத்தில், தேவைகள் அதிகம் உள்ள மக்களுக்குச் சேவை செய்வதும் இரமதான் சொல்லித்தரும் முக்கியக் கருத்து என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் Barack Obama செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.