2012-08-20 15:03:39

அடிப்படைவாதக் குழுவினரின் ஆதிக்கத்தை நீக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளின் தலையீடு மிகவும் அவசியம் - நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர்


ஆக.20,2012. Boko Haram என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினரின் ஆதிக்கத்தை நைஜீரியாவில் நீக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளின் தலையீடு மிகவும் அவசியம் என்று நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Ignatius Kaigama கூறினார்.
இத்தாலியின் Rimini எனுமிடத்தில் ஆகஸ்ட் 19 இஞ்ஞாயிறு முதல் வருகிற சனிக்கிழமை முடிய நடைபெறும் ஒரு கருத்தரங்கில் இஞ்ஞாயிறு உரையாற்றிய பேராயர் Kaigama, அண்மையில் நைஜீரியாவில் Boko Haram குழுவினரின் வன்முறைகளால் கிறிஸ்தவர்கள் அனுபவித்து வந்துள்ள துன்பங்களை தன் உரையில் விளக்கினார்.
ஒவ்வொரு முறையும் நான் என் வாகனத்தில் ஏறி வெளியேச் செல்லும்போது மீண்டும் திரும்பி ஆயர் இல்லத்திற்கு வருவேனா என்ற சந்தேகத்துடன் நான் வாழ்ந்து வருகிறேன் என்று கூறிய பேராயர் Kaigama, எதுவும், எந்த நேரமும் நிகழலாம் என்று அச்சத்தில் வாழுந்து வரும் மக்கள் தொடர்ந்து தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துவது ஆறுதலாக உள்ளது என்று எடுத்துரைத்தார்.
"மதச் சுதந்திரம்: கொள்கையும், விளைவுகளும்" என்ற தலைப்பில் Riminiயில் நடைபெறும் கருத்தரங்கில் இத்தாலி, எகிப்து, கனடா ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளுடன், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகச் செயலாற்றும் பேராயர் Silvano Tomasi உட்பட பல வத்திக்கான் அதிகாரிகளும், பிரதிநிதிகளும் பங்கேற்று வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.