2012-08-17 15:45:35

சிகரெட் பெட்டிகளை அச்சடிப்பதற்குப் பதிய வழிகள் - ஐரோப்பிய ஒன்றியம் ஆய்வு


ஆக.17,2012. புகையிலை நிறுவனங்களின் அடையாளங்களை சிகரெட் பெட்டிகளில் அச்சடிப்பதைத் தடுக்கும் வழிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆய்வு செய்து வருகிறது.
ஒரே நிறத்திலும், சிகரெட் புகைப்பதன் தீய விளைவுகளைக் காட்டும் படங்களுடனும் சிகரெட் பேட்டிகள் அமையவேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் அரசு விதித்த அணையை ஆதரித்து அந்நாட்டு உச்ச நீதி மன்றம் அண்மையில் கொடுத்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலும் இந்த ஆணை நடைமுறைப்படுத்த முடியுமா என்று ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
பொதுவாக, இளையோர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாவது அந்தந்த நிறுவனங்களின் பெயர்களாலேயே என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதால், இளையோரிடையே புகைபிடிக்கும் மோகத்தைக் குறைக்க இந்த வழிமுறை ஓரளவாகிலும் உதவும் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, பிரித்தானிய அரசும் சிகரெட் பெட்டிகளில் மாற்றங்களைக் கொணரும் வழிகளை கடந்த நான்கு மாதங்களாக ஆய்வு செய்து வருகிறது என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.