2012-08-17 15:12:04

ஆகஸ்ட், 18, 2012. கவிதைக் கனவுகள்........ அஞ்சி நிற்க மாட்டோம் என்கிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


எளிய மக்கள் தலையில்காசு
ஏறி மிதிக்குது - அதை
எண்ணி எண்ணித் தொழிலாளர்
நெஞ்சு கொதிக்குது
வஞ்சனைக்கும் அஞ்சிடோம்
பஞ்சம் நோய்க்கும் அஞ்சிடோம்
பட்டினிக்கும் அஞ்சிடோம்
நெஞ்சினைப் பிளந்தபோதும்
நீதி கேட்க அஞ்சிடோம்
நேர்மையற்ற பேர்களின்
கால்களை வணங்கிடோம்
காலி என்றும் கூலி என்றும்
கேலி செய்யுங் கூட்டமே
காத்துமாறி அடிக்குது - நீர்
எடுக்கவேணும் ஓட்டமே
தாலி கட்டிக்கொண்ட மனைவி
போலுழைத்த எங்களைத்
தவிக்கவிட்ட பேரை - எந்த
நாளும் மறக்கமாட்டோமே








All the contents on this site are copyrighted ©.