2012-08-16 15:11:48

உலகில் வன்முறைகள் பெருகி வருவது குறித்து Ecumenical முதுபெரும் தலைவர் கவலை


ஆக.16,2012. இன்றைய உலகில் அமெரிக்கா முதல் ஆப்ரிக்கா வரையிலும், ஐரோப்பா மற்றும் ஆசியப்பகுதிகளிலும் வன்முறைகள் பரவிவருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் Ecumenical முதுபெரும் தலைவர் Bartholomew.
இன்றைய உலகம் சகிப்பற்ற தன்மைகளை எதிர்கொள்வதால் உலக அமைதியும் நிலையான தன்மையும் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, மனித மாண்பு மறுக்கப்படுவதும் இடம்பெறுகிறது என்றார் முதுபெரும் தலைவர் Bartholomew.
நிறவெறிக் கொலைகள், இனப் படுகொலைகள், இன ஒழிப்பு, யூத விரோதப்போக்கு, வழிபாட்டுத்தலங்கள் சேதமாக்கப்படல் போன்றவை வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும், அதிலும் குறிப்பாக, மதப்போர்வையில் அவைகள் நியாயப்படுத்தப்பட முயலும்போது கண்டனங்கள் தீவிரமாக இருக்கவேண்டும் என்றார் முதுபெரும் தலைவர்.
மத்தியக்கிழக்குப் பகுதியிலிலும், நைஜீரியா, சூடான் போன்றவைகளிலும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நிலவும் வன்முறைகள் நிறுத்தப்படவும், சிரியாவின் அமைதிக்கு அனைவரும் உழைக்கவும் அழைப்புவிடுத்த முதுபெரும் தலைவர் Bartholomew, அமைதி, மாற்றம், ஒப்புரவு ஆகியவைகளை அடைவதற்கு, கலந்துரையாடலே முக்கியப் பாதை என்பதையும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.