2012-08-14 17:03:05

பிலிப்பீன்ஸில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவ காரித்தாஸ் விண்ணப்பம்


ஆக.14,2012. பிலிப்பீன்ஸ் நாட்டில் அண்மைய வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவநல்மனம்படைத்தோரின் நிதியுதவிகள் தேவைப்படுவதாகதலத்திருஅவை அறிவித்துள்ளது.
திருஅவையின் பிறரன்பு பணிகளுக்கெனகடந்தகுருத்து ஞாயிறன்று கோவில்களில் திரட்டப்பட்டபணம் தற்போது வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டமக்களுக்கு செலவளிக்கப்படும் என்றார், காரித்தாஸ் அமைப்பின் தேசியசெயலர் அருள்தந்தை Edu Gariguez.
மணிலாவுக்கு அருகிலுள்ள மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உரைத்த அருள்தந்தை Gariguez, ஏற்கனவே திரட்டப்பட்ட தொகையைக்கொண்டு ஆரம்பப்பணிகளை ஆற்ற முடிகின்றபோதிலும், மேலும் நிதியுதவிகள் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
மணிலாவுக்கு அருகேயுள்ள Iba பகுதியில் மட்டும் குறைந்தபட்சம் 2,700 குடும்பங்கள் அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. San Fernando-Pampanga மாவட்டத்தில் 11 நகர்களும் 160 கிராமங்களும் இன்றும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.