2012-08-14 17:02:16

நிதி பற்றாக்குறையால் வடக்கு இலங்கையில் ஐ.நா தொண்டு நிறுவனங்களின் பணி இடைநிறுத்தம்


ஆக.14,2012. இலங்கையின் வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுவரும் ஐக்கிய நாடுகள் அவையின் தொண்டு நிறுவனங்கள் தமது பணிகளை நிதி பற்றாக்குறை காரணமாக தொடரமுடியாமல் இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு முன்னர் உதவிகளை வழங்கியவர்கள் தற்போது இலங்கைக்கு உதவ முன்வருதில்லை என ஐ.நாவின் மனிதாபிமான உதவிகளுக்கான செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஜிங் தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள 1470 கோடி டாலர் நிதி தேவைப்படுவதாக கொழும்பிலுள்ள ஐ.நா. தூதரகம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் 18.4 விழுக்காட்டு நிதியே இதுவரை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.