2012-08-13 16:20:32

பாகிஸ்தானில் மத சிறுபான்மையுயினர் தினம்


ஆக.13,2012. வெவ்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும் பாகிஸ்தான் மக்கள் அனைவரும் வளம் நிரம்பிய ஒன்றிணைந்த பாகிஸ்தானை உருவாக்க இணைந்து உழைத்து வருவதாக உரைத்தார் அந்நாட்டு பிரதமரின் சிறப்பு ஆலோசகர் Paul Bhatti.
"சிறுபான்மையினர் தினம்" பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட, தேசிய இணக்க வாழ்விற்கான பிரதமரின் சிறப்பு ஆலோசகர் Paul Bhatti, கல்வி, நல ஆதரவு மற்றும் பாதுகாப்பு தொடர்புடையவைகளில் சிறுபான்மையினர் நாட்டிற்கு வழங்கியுள்ள பெரும்பங்கைச் சுட்டிக்காட்டினார்.
தீவிரவாதம், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் கவலையை வெளியிட்ட அவர், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் தன் சகோதரர் முன்னாள் அமைச்சர் Shahbaz Bhatti ஆகியோர் கொலைச்செய்யப்பட்டதையும் எடுத்தியம்பினார்.
தீவிரவாதத்திற்குப் பலியான இவர்களிருவரும் குடியரசுக் கொள்கைகளுக்கும், சரிநிகர் சமூக அமைதிக்கெனவும் தங்களை அர்ப்பணித்தவர்கள் எனவும் எடுத்தியம்பினார்.
சிறுபானமியினருக்கான அமைச்சராக இருந்த Shahbaz Bhatti, பாகுபாட்டு நிலைகள், சகிப்பற்ற தன்மைகள் மற்றும் மத தீவிரவாதத்திற்கு எதிரானப் பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் என்பதை மேலும் எடுத்தியம்பினார் Paul Bhatti.








All the contents on this site are copyrighted ©.