2012-08-08 15:41:56

மனித முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எந்த அறிவியல் முயற்சியையும் திருஅவை வரவேற்கிறது - வத்திக்கான் வானியல் ஆய்வு மையத்தின் இயக்குனர்


ஆக.08,2012. அறிவியல் உலகம் தீர ஆய்வு செய்து வெளியிடும் ஒவ்வொரு உண்மையையும் திருஅவை திறந்த மனதுடன் வரவேற்கிறது என்று வத்திக்கான் வானியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை Jose Gabriel Funes, கூறினார்.
ஆகஸ்ட் 5, இஞ்ஞாயிறன்று அமெரிக்க NASA மையத்தின் Curiosity என்ற ஓர் ஆய்வு ஊர்தி செவ்வாய் கோளத்தில் வெற்றிகரமாக இறக்கப்பட்டதையோட்டி வத்திக்கான் வானொலிக்கு பேட்டியளித்த அருள்தந்தை Funes, இந்த அறிவியல் சாதனை உலகமனைத்திற்கும் மகிழ்வைத் தருகிறது என்று கூறினார்.
2011ம் ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கோளம் நோக்கி பயணம் துவக்கிய Curiosity, இஞ்ஞாயிறு இரவில் அங்கு தரையிறங்கியுள்ளது. அடுத்த ஈராண்டுகள் இந்த ஆய்வு ஊர்தி செவ்வாய் கோளத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
வானியல் ஆய்வு மையம் ஒன்று வத்திக்கான் பெயரால் இயங்கிவருகிறது என்பதே, திருஅவை அறிவியலைக் கண்டு அஞ்சுவதில்லை, மாறாக, மனித முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எந்த அறிவியல் முயற்சியையும் திருஅவை உற்சாகப்படுத்தி வருகிறது என்பதற்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டு என்று அருள்தந்தை Funes கூறினார்.








All the contents on this site are copyrighted ©.