2012-08-07 15:59:03

பிரான்சில் கோடைகால “நற்செய்தி அறிவிப்பு” விழா


ஆக.07,2012. பிரான்சில் நற்செய்தி அறிவிப்பில் புதிய முறைகளைப் புகுத்தும் விதமாக, இம்மாதம் 15 முதல் 26ம் தேதி வரை “அறிவிப்பு” என்ற தலைப்பில் 12 நாள்கள் கோடைகால “நற்செய்தி அறிவிப்பு” விழாவைச் சிறப்பிக்கவிருக்கின்றது தலத்திருஅவை.
இந்தக் கோடைகால விழாவில், 18க்கும் 35 வயதுக்கும் உட்பட்ட இளையோருக்கு நற்செய்தி அறிவிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நற்செய்தி அறிவிக்கும் முயற்சி 4 கட்டங்களாக இடம்பெறும். முதல் கட்டமாக, இம்மாதம் 15 முதல் 17 வரை செபத்தில் கவனம் செலுத்தப்படும். பின்னர் 23ம் தேதி வரை பிரான்சின் தெருக்கள் மற்றும் கடற்கரைகளில் நற்செய்தி அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பில், செபமும் பாடல்களும் இடம்பெறும். இறுதியாக அனைவரும் சேர்ந்து விழாவில் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் ஐரோப்பாவுக்கு கோடைகாலமாகும்







All the contents on this site are copyrighted ©.