2012-07-28 15:21:42

கடந்த ஆண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் 3 இலட்சம் அமெரிக்கருக்கு வேலை


ஜூலை,28,2012. இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் கடந்த ஆண்டில் மட்டும் 2.8 இலட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைத்ததாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஆசிய அமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர், அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன. நிறுவனங்களை வாங்கியது மற்றும் பெரிய திட்டங்களில் கடந்த ஆண்டில் அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் 500 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு செய்தன. அதன்மூலம், 2.8 இலட்சம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்புப் பெற இந்திய நிறுவனங்கள் உதவியுள்ளன என்று அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.