2012-07-27 16:36:19

அசாம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்புவதற்கு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது கத்தோலிக்கத் திருஅவை


ஜூலை,27,2012. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இடம்பெறும் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்புவதற்கு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.
வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமின் பல மாவட்டங்கள் மதியற்ற வன்முறையாலும் மனிதாபிமான நெருக்கடியாலும் நிறைந்துள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ள ஆயர்கள், இந்தக் கலவரங்களில் சம்பந்தப்பட்டுள்ள குழுக்கள் அன்பிலும் சகோதரத்துவ உணர்விலும் வாழும் முறைகளைக் கண்டுணருமாறு கேட்டுள்ளனர்.
இம்மாதம் 20ம் தேதி நான்கு போடோ இன இளைஞர்கள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ்விரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுக்கள், குடியிருப்புக்களுக்குத் தீ வைத்து வீடுகளையும் சூறையாடியுள்ளன. இதில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் இரண்டு இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் மற்றும் பெருமளவான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.