2012-07-26 14:08:03

கவிதைக் கனவுகள் - இலட்சியம் – அறிவியல்மேதை டாக்டர் அப்துல் கலாம்


நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா
நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது அறிவுப்புதையல் என் இறைவா
நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது அமைதித் தீவு என் இறைவா
இறைவா, இறைவா, நூறு கோடி மக்கள்
இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும்,
இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக.
வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் நல்ல மன உறுதியுடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்.
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் இலட்சியம்.
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.








All the contents on this site are copyrighted ©.