Super Ratoவத்திக்கான் அலுவலகத்தின் தலைவர் பேரருட்திரு Paul
Pallath
ஜூலை,26,2012. Super Rato என்ற வத்திக்கான் அலுவலகத்தின் தலைவராக பேரருட்திரு Paul Pallath
அவர்களை இவ்வியாழனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். Super Rato என்ற
வத்திக்கான் அலுவலகம், மணமுறிவு மற்றும் குருத்துவத்திருநிலைப்பாட்டிலிருந்து விலகுதல்
குறித்த விவகாரங்கள் தொடர்புடையது. இது, திருஅவையின் Roman Rota உச்சநீதிமன்றத்தில் நிர்வாக
அலுவலகமாக 2011ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த
வத்திக்கான் அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்திரு Paul Pallath, 1959ம்
ஆண்டு கேரளாவின் Palai மறைமாவட்டத்தில் Ezhacherry என்ற ஊரில் பிறந்தவர். திருஅவை சட்டத்தில்
முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், 1995ம் ஆண்டு மே 15ம் தேதியன்று திருவழிபாட்டுப் பேராயத்தில்
பணியில் சேர்ந்தார்.