2012-07-25 16:01:49

தொமினிக்கன் குடியரசு நாட்டில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் ஆபத்தான அளவு பரவியுள்ளது - கர்தினால் López Rodríguez


ஜூலை,25,2012. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொமினிக்கன் குடியரசு நாட்டில் பெரும் ஆபத்தான அளவு பரவியுள்ளது என்று அந்நாட்டு கர்தினால் ஒருவரும், பேராயர் ஒருவரும் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளைத் தடுக்க தொமினிக்கன் குடியரசு, சட்டத் தீர்திருத்தங்களைத் தாமதிக்காமல் கொண்டுவர வேண்டுமென்று Santo Domingo பேராயரான கர்தினால் Nicolás de Jesús López Rodríguez, மற்றும் Santiago de los Caballeros பேராயர் Ramon de la Rosa y Carpio அவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாட்டின் பெரும் அவமானம் என்று அந்நாட்டின் அரசுத் தலைவராகப் பணியாற்றி ஒய்வு பெறும் Leonel Fernandez அவர்களும் அண்மையில் கூறியுள்ளார்.
தொமினிக்கன் குடியரசில் கடந்த சில மாதங்களில் 100க்கும் அதிகமான பெண்கள் கொடுமையான முறைகளில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.