2012-07-25 16:28:21

சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் விமானம்


ஜூலை,25,2012. சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய மின்சக்தியில் இயங்கும் விமானம், தென்மேற்கு பிரான்சில் உள்ள Toulouse விமான நிலையத்தில் தனது பயணத்தைத் தொடங்கியது.
இந்த விமானம் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் வழியாக சென்று, வடக்கு ஆப்ரிக்காவின் மொராக்கோ நாட்டின் தலைநகரை அடைந்து, மீண்டும் இச்செவ்வாயன்று சுவிட்சர்லாந்தில் தரையிறங்கியது.
உருவத்தில் பெரியதாகவும், எடையில் குறைவாகவும் காணப்படும் இந்த விமானம் 12,000 சூரியஒளி செல்களுடன், நான்கு மின்சார இயந்திரங்களைக் கொண்டுள்ளது.
விமானி Bertrand Piccard இந்த விமானத்தை ஓட்டிச்சென்றார். இவர் ஏற்கெனவே வெப்பக் காற்று நிரப்பப்பட்ட பலூனின் உதவியுடன் உலகைச் சுற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் மற்றொரு விமானியான André Borschberg சென்றார்.
மாற்று சக்திகள் கொண்டு வாழ்வைப் பாதுகாப்பாக நடத்தலாம் என்பதை உலகறியச் செய்வதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று Bertrand Piccard கூறினார்.
தற்போது சூரிய சக்தியால் இந்த விமானம் சென்றது ஓர் ஒத்திகை போல அமைகிறது. 2014ஆம் ஆண்டில் இந்த விமானத்தை இன்னும் சிறப்பாக உருவாக்கி, சூரிய சக்தியால் உலகம் முழுவதும் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.








All the contents on this site are copyrighted ©.