2012-07-25 16:17:39

ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டத்தில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்


ஜூலை,25,2012. இலண்டன் மாநகரை தற்போது வலம்வரும் ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டத்தில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களும் இவ்வியாழனன்று கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வியாழனன்று இச்சுடரை ஏந்திச்செல்லும் பான் கி மூன், வெள்ளியன்று நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் துவக்கவிழாவிலும் கலந்துகொள்வார் என்று ஐ.நா. அதிகாரி Eduardo del Buey இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
விளையாட்டுப் போட்டிகளும், உடல் பயிற்சியும் உலக அமைதியை வளர்க்கும் கருவிகளாக அமைய முடியும் என்ற கருத்தை வலியுறுத்தவே பான் கி மூன் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்று கூறப்படுகிறது.
கோடை ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கவிழா நடைபெறும் ஜூலை 27 முதல் மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும் செப்டம்பர் 9ம் தேதி வரை உலகெங்கும் போர்கள் நிறுத்தப்படவேண்டும் என்று ஐ.நா.வின் உறுப்பினர்களாக இருக்கும் 197 நாடுகள், 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி மொழி எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.