2012-07-21 15:49:39

வாஷிங்டனில் 19வது அனைத்துலக எய்ட்ஸ் கருத்தரங்கு


ஜூலை,21,2012. கடந்த ஆண்டில் உலகில் 3 கோடியே 42 இலட்சம் பேர், எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாகும் HIV நோய்க்கிருமிகளுடன் வாழ்ந்தனர், இவ்வெண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட சற்று அதிகம் என்று UNAIDS என்ற ஐ.நா.எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
வாஷிங்டனில் இத்திங்களன்று ஆரம்பமாகும் எய்ட்ஸ் நோய்க் குறித்த 19வது அனைத்துலக கருத்தரங்கையொட்டி புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள UNAIDS அமைப்பு, இந்த நோயாளிகளில் 31 இலட்சம் சிறார் உட்பட 2 கோடியே 35 இலட்சம் பேர் ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் வாழ்கின்றனர் என்று அறிவித்தது.
"நாம் எல்லாரும் சேர்ந்து எய்ட்ஸ் நோய்க்கு முடிவு கட்டலாம்" என்ற தலைப்பில் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது இந்த ஐ.நா. அமைப்பு.
இதற்கிடையே, இந்தியாவிலுள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 20 விழுக்காட்டினர் ஆந்திராவில் உள்ளனர் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா முழுவதும் எச்.ஐ.வி. கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 இலட்சம். இவர்களில் 5 இலட்சம் பேர் ஆந்திராவில் உள்ளனர். 2வது இடத்தில் மகாராஷ்டிராவும்(4.19இலட்சம்), 3வது இடத்தில் கர்நாடகாவும்(2.45இலட்சம்)உள்ளன என்று அப்புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கல்வியறிவின்மை, மோசமான நலவாழ்வு, வேலைவாய்ப்பின்மை, புலம்பெயர்தல், முறையற்ற பாலியல் பழக்கங்கள் போன்றவை எச்.ஐ.வி பரவியதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.