2012-07-18 16:33:50

செயற்கைக்கோள் மூலம் தெரியும் பாலை நிலங்களுக்கு அடியில் புதைந்திருக்கும் பழமைவாய்ந்த நகரங்கள்


ஜூலை,18,2012. மத்திய கிழக்குப் பகுதியிலும் ஐரோப்பாவிலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு புதைந்துபோன நகரங்களைக் காண நாம் விண்வெளிக்குச் செல்லவேண்டும் என்று அகழாய்வுத்துறை அறிஞர் Sarah Parcak கூறினார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள பாலை நிலங்களுக்கு அடியில் புதைந்திருக்கும் பழமைவாய்ந்த நகரங்களைச் செயற்கைக்கோள் மூலம் முழுமையாக, துல்லியமாகக் காணமுடிகிறதென்று அமெரிக்காவின் அலபாமா பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஆயவாளர் Sarah Parcak இச்செவ்வாயன்று அறிவித்தார்.
செயற்கைக்கோள் படங்கள் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன் மண்ணுக்கடியில் புதைந்துபோன பிரமிடுகள், கோவில்கள், முழுமையாகக் கட்டப்பட்ட நகரங்கள் ஆகியவற்றைக் காணமுடியும் என்று கூறிய ஆயவாளர் Sarah Parcak, நமது பழமைக் காலாச்சாரங்களை அறிந்து கொள்வது நமது எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் என்று எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.