ஜூலை 17,2012. AU என்ற ஆப்ரிக்க ஒன்றியத்தில் முதன்முறையாக பெண் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு
ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தென்னாப்ரிக்க
அரசுத்தலைவர் Jacob Zumaவின் முன்னாள் மனைவியான Nkosazana Dlamini-Zuma, 2008ம் ஆண்டிலிருந்து
ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவராக இருக்கும் காபோன் நாட்டு Jean Ping என்பவரைத் தோற்கடித்து
தலைவராகியுள்ளார். Dlamini-Zuma, இத்தலைவர் பதவிக்கு வந்துள்ள முதல் பெண் என்பது
தவிர, தென்னாப்ரிக்காவிலிருந்து இப்பதவிக்கு வந்துள்ள முதல் நபரும் ஆவார். தென்னாப்ரிக்காவில்
நெல்சன் மண்டேலா அமைச்சரவையில் நலவாழ்வு அமைச்சராகவும் பணியாற்றிய இவர் ஒரு மருத்துவர்
மற்றும் அரசியல் தூதர்.