2012-07-13 16:11:45

அருளாளர் Peter To Rotன் இறப்புக்கு பாப்புவா நியு கினியிடம் ஜப்பான் திருஅவை மன்னிப்பு


ஜூலை13,2012. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் மேற்கொண்ட பயங்கரமான செயல்களுக்கு, குறிப்பாக, அருளாளர் Peter To Rotன் விலைமதிப்பில்லாத வாழ்வு பறிக்கப்பட்டதற்கு ஜப்பான் திருஅவை மன்னிப்புக் கேட்பதாக அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Leo Ikenaga கூறியுள்ளார்.
அருளாளர் Peter To Rot பிறந்ததன் நூறாவது ஆண்டைச் சிறப்பித்த Papua New Guinea கத்தோலிக்கருக்குக் கடிதம் எழுதிய பேராயர் Ikenaga, ஜப்பான் ஆக்ரமிப்பாளர்கள் செய்த இந்தச் செயலுக்கு எவ்விதத்திலும் நியாயம் சொல்லமுடியாது என்பதால் ஜப்பான் திருஅவை மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஓசியானியாவில் திருமணத்தின் மாண்பைப் பாதுகாப்பதற்காகப் போராடிய அருளாளர் Peter To Rot, ஜப்பான் ஆக்ரமிப்பாளர்களால் மிகக் கொடூரமாய்க் கொல்லப்பட்டார்.ஓசியானியாவில் மறைபோதகர்கள் மிகக் குறைவாக இருந்த அக்காலத்தில் Peter To Rot இளம் வேதியராக, எடுத்துக்காட்டான திருமண வாழ்வை வாழ்ந்து வந்தார். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியப் படைகள் பாப்புவா நியு கினியை ஆக்ரமித்து குருக்களையும் துறவிகளையும் கைது செய்தன. வதைப்போர் முகாம்களிலும் வைத்தன. குருக்கள் இல்லாத நிலையில், குழந்தைகளுக்குத் திருமுழுக்குக் கொடுப்பதிலும் இறந்தோரை அடக்கம் செய்வதிலும் திருமணத்திற்கு உதவி செய்வதிலும் Peter To Rot, வேதியராகத் தன்னை அர்ப்பணித்தார். ஜப்பானியப் படைகள் திருஅவையின் நடவடிக்கைகளைத் தடைசெய்து திருஅவை கட்டிடங்களையும் தகர்த்தன. பலதாரத் திருமணங்களைச் செய்யவும் மக்களைக் கட்டாயப்படுத்தினர். ஆனால் Peter To Rot தனது திருமணவாழ்வை மாற்றிக்கொள்ள மறுக்கவே, அவர் கைது செய்யப்பட்டு, சித்ரவதைப்படுத்தப்பட்டுக் கொடூரமாய்க் கொல்லப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.